×

புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

 

திருப்பூர், மே 6: இந்தியாவில் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் இதனை தடுக்கவும், புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு அமைப்பினர் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பல்வேறு தனியார் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி அமைப்புகள் சார்பில் புற்று நோயை தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அடிக்கடி உடலை பரிசோதனை செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மது அருந்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் தொடங்கி வைத்தார்.

தனியார் அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணி பல்வேறு சாலைகள் வழியாக நஞ்சப்பா பள்ளி வந்தடைந்தது. நஞ்சப்பா பள்ளியில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பலரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் பின்னர் சைக்கிள் பேரணி அங்கிருந்து புறப்பட்டு அவிநாசியில் முடிவடைந்தது.

The post புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Cancer Awareness Cycle Rally ,Tirupur ,India ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறையால் பாத்திர...